Tuesday, December 20, 2011

4.ஆழிமழை கண்ணா


ஆழிமழை கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

அர்த்தம் :

¸¼ø §À¡§Ä ¸3õÀ£4ÃÁ¡É ŠÅ¡À4¡Åò¨¾Ô¼Â Á¨Æì¸ñ½¡! Á¨ÆìÌò ¾¨ÄÅÉ¡É ÅÕ½ §¾Å§É! ¿£ º¢È¢Ðõ ´Ç¢ì¸ìܼ¡Ð. ºÓò¾¢Ãò¾¢ø ÒÌóÐ, «íÌûÇ ¿£¨Ã ¦Á¡ñÎ ¦¸¡ñÎ, þÊ þÊòÐì ¦¸¡ñÎ ¬¸¡ºò¾¢ø ²È¢ ¸¡Äõ ӾĢ º¸Ä À¾3¡÷ò¾4í¸ÙìÌõ ¸¡Ã½â4¾É¡É ±õ¦ÀÕÁ¡Û¨¼Â ¾¢Õ§ÁÉ¢ §À¡ø ¯¼õÒ ¸ÚòÐ, ¦ÀÕ¨Á¨ÂÔõ, «Æ¨¸Ôõ ¦¸¡ñ¼ §¾¡Ù¨¼ÂÅÛõ, ¿¡À£4¸ÁÄò¨¾ ¯¨¼ÂÅÛÁ¡É ±õ¦ÀÕÁ¡Û¨¼Â ÅÄÐ ¨¸Â¢ø ¯ûÇ ¾¢ÕšƢ¡úÅ¡¨Éô §À¡§Ä Á¢ýÉ¢, þ¼Ð ¨¸Â¢ø ¯ûÇ À¡ïººýɢ¡úÅ¡¨Éô §À¡§Ä ¿¢¨Ä ¿¢ýÚ ÓÆí¸¢ ¸¡Ä ¾¡Á¾õ ¦ºö¡§¾. ‚…¡÷í¸ò¾¢É¡§Ä ¾ûÇôÀð¼ À¡½ Å÷„õ §À¡ø ¯Ä¸ò¾¡Ã¨ÉÅÕõ Å¡Øõ ÀÊ¡¸×õ, §¿¡ýÒ §¿¡ìÌõ ¿¡í¸Ùõ …󧾡„òмý Á¡÷¸Æ¢ ¿£Ã¡Îõ ÀÊ¡¸×õ Á¨Æ ¦Àöš¡¸.




விளக்கவுரை 

ஆழி மழை கண்ணா ஒன்று நீ கைகரவேல்:
நோன்பு நோற்பது ஒருவாறு இருக்கட்டும். பரமைகாந்திகளான இவர்கள் மழைதேவனை தொழக்கூடுமோ எனில், இவர்கள் அவனை வேண்ட வில்லை. ஆனால் இவர்கள் நோன்பிறுப்பதை கண்ட மழைத்தேவன் தானே முன் வந்து என்ன உத்திரவு என் வேண்ட, அவனை கண்கொண்டு பேசாது கண்ணனிடத்திலேயே இவர்கள் பேசுகின்றனர். பரமைகாந்திகளை கண்டால் தேவர்கள் நடுங்குவார். இவர்களிடத்தே அவர்களே வருவர். அதேபோல் மழத்தேவனும் வந்தான். செய்யவேண்டியது என்னவென்றும் கேட்டான். மழைத்தேவன் மழைதானே பெய்விக்க முடியும் எனில், இவன் கிங்கரன், பணியாள். திருமாலின் அடியவர்கள் சொற்படி பணிசெய்வான். அதற்காகவே வந்து செய்யவேண்டியது என்ன என்று வினவுகின்றான். இப்படி அண்டி கேட்டவனுக்கு பதிலுரைப்பது போல் வாழ உலகினில் பெய்திடாய் என்று நியமித்தாயிற்று. ஆகிலும் நேராக அவனுக்கு பதிலுரைக்காமல் கண்ணன் மூலமாகவே அவனுக்கு கட்டளையிட்டாயிற்று. சரி மழைதான் பெய்து விட்டதே அப்பொழுது நோன்பு நிருத்திவிடலாமோ எனில், இனி கோபர்கள் இவர்களை தடுக்க மாட்டார்கள். ஏனெனில் தேவர்களே இவர்களிடத்தே அஞ்சி நடப்பதை அவர்கள் கண்டு கொண்டனர் என்றபடி.
சரி இவர்கள் கண்ணன் என்னும் போது பெயரை இட்டு மழைத்தேவனை விளித்தரோ என வியக்கில் அங்கனம் இல்லை. இவர்கள் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே வாழ்பவர்கள். நின்னையே தான் வேண்டி நீல் செல்வம் வேண்டாதவர்கள். அதுவுமட்டுமின்றி இவர்கள் சொல்லும் உபலக்ஷனங்கள் (ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் அதிர்ந்து, சார்ங்கமுதைத்த சரமழை) கண்ணனுக்கே அன்றி வேறு தேவதைகளுக்கு கூடாது. ஆக பர்ஜன்ய தேவனை கண்ணன் என்று அழைக்கவில்லை. ஆகிலும் கோபர்கள் அவ்விதம் கொண்டனர் என்று இருந்தாலும் இவர்கள் கண்ணனையே விளித்தனர். இருப்பினும் பெரியவர்கள் அங்கணம் பொருள் உரைப்பராகில் அதனையும் கொள்ளவேண்டும்.

ஆழியுட் புக்கு இத்யாதி:
ஆழியுட் புக்கு- ஆழி என்பது சமுதிரத்தை குறிக்கும் .நாடு நகரத்தில் உள்ள ஏறி குளங்களில் நீரை முகர்ந்து அதே நாட்டில் மழை பொழிய செய்வது இயற்கை..... ஆழ் கடலுக்குள் புகர்ந்து எவ்வளவு நீர் முகர முயுமோ , அவ்வளவு முகந்து ஆர்த்தேறி- சத்தம் இட்டு இடி இடித்து கொண்டு மேகமாக அந்த நீரை தூக்கி கொண்டு எங்கள் மேல் மழை பொழிவை.. , ஊழி முதல்வன் – கல்பம் தோறும வேறு வேறு பிரம்மன். ஆனால் எம்பெருமான் ஒருவனே முதல்வன். பற்பநாபன் – திருவயிரின் உத்தரபந்தத்தில் பிரம்மன் இருப்பதால் (திருவனந்தபுரத்தில் சேவை சாதிக்கும்படி) அம்தோளுடை – தோள்வலிமையை மெச்சியாயிற்று. இந்த வலி கொண்டே சக்கரம் ஏவுவது சந்ஹ்கம்(சங்கு) ஊதுவது, சார்ங்கம் (வில் ) தொடுப்பதுமாம். (மல்லாண்ட திண்தோள் பின்னே வலதுரையும் ஆழியும் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு). ஒவ்வொரு ஆயுதத்திற்கும் தோள் சம்பந்தம் உண்டாம். ஆக கண்ணனே நீ மழை பெய்திடாய்.

சார்ங்கமுதைத சரமழை:

சார்ங்கம் என்பது
ராமர் பெருமானின் வில். அந்த வில்லின் நானில் இருந்து   இருந்து புறப்பட்ட பாண (அம்பு) மழை போல . ஆக பெருமான் சார்ங்கபாணி. 
இதை ஆரண்ய காண்டத்தில் கரதூஉஷன வதத்தில் காண்க. ஒரு நாழிகையில் பதினாலாயிரம் அரக்கரை அழத்தான் வில்கொண்டு.

இந்த பாசுரத்தில் ஆண்டாள் தமிழின் சிறப்பெழுத்தாம் ழகாரத்தை பதினொரு முறை உபயோகித்துள்ளாள்.
ஆழி, மழை, ஆழி, ஊழி, பாழி, ஆழி, தாழாதே, சரமழை, வாழ, மார்கழி, மகிழ்ந்து.

உட்கருத்து:
கீழ் பாட்டில் சிஷ்யன் ஆச்சாரியனை அண்டி  நலம் பெறவேண்டும் என்று அறிவுரை செய்தாயிற்று. இந்த பாட்டில் ஆச்சாரிய வந்தனம்.
ஆழி - ஞான வைராக்ய காருண்யம் என்னும் கடலைப்போன்ற கல்யாணகுணங்களை உடைய ஆச்சாரியனே.
மழை கண்ணா - ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரன், வாங்மய வர்ஷ நிர்வாஹனே
ஒன்றும் நீ கைகரவேல் – ஓவ்வொரு விஷயமாக சிஷ்யனின் பிரத்தினைக்கு ஏற்ப சொல்லாமல், அனைத்தும் அருளவேண்டும். எப்படி சுவேதாகேதுவுக்கு உத்காழகர் அருளினாரோ அப்படி.
ஆழியில் – உபநிஷத்துக்கள் என்னும் கடலில்
புக்கு முகர்ந்து – அதி சீக்கிரத்தில் அறிதான விஷயங்களை சிஷ்யன் எளிதில் கிரகிக்கும்படி செய்யவேண்டும்.
ஆர்த்து ஏறி – கர்ஜித்து ஆச்சாரிய பீடத்தில் ஏறி வீற்றிருந்து
ஊழி முதல்வன்
போலேமஹா கருணிகனான எம்பெருமானை போலே அனுக்ரஹிக்கப் பெற்றோம் என்று பூரித்த மேனியாய்
ஆழிபோல் மின்னி – ஞானம் எனும் ஒளியை பரப்பி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து – கதிக்கிநியவை அசைக்கமுடியாதவையுமான மொழிகளை பொழிந்து
சரமழைபோல் பெய்திடாய் –
ஞான மழையை பொழிந்திடாய் ( ராமர்  பானத்தில் இருந்து புறப்பட்ட அம்பு போல் ) 
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து – தேவரீர் உபதேசைத்தபடி நாங்களும் கிரந்தங்களின் வழியில் சகல நித்யகர்மானுஷ்டானங்களை உபாதான காலத்தில் உபவாசம் இருக்கும் எங்களை பார்த்து மகிழ்ந்து என்றவாறு.



இவ்வளவில் ஒரு தோழி வந்து தலைமைகளிடம் இடையர்களின் முணுமுணுப்பை சொல்லுகின்றாள். அதுவாவது நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்பவை பர்ஜன்ய தேவதை உத்தேசித்து செய்வது சரி. ஆகிலும் இந்த பரமனடி பாடி, உய்யுமாறு எண்ணி, உத்தமன் பேர் பாடி இவைகள் எதற்கு என்பது அந்த முணுமுணுப்பு. அதற்கு பதில் மேல் பாட்டில் உரைகின்றா
.

No comments:

Post a Comment